போடிநாயக்கனூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா
தேனி எம்பி தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி மற்றும் மகளிர் உரிமைத்துறை தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் ஜசிடிஎஸ் இணைந்து நடத்திய சமுதாய வளைகாப்பு விழா போடி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
இந்த சமுதாய வளைகாப்பு விழாவிற்கு தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமை வகித்து விழாவின் முக்கிய அங்கமான கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளையல் மற்றும் சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி போடி நகரச் செயலாளர் ஆர் புருஷோத்தமன் தலைமை செயற்குழு உறுப்பினரும் நகர் மன்ற உறுப்பினருமான எம் சங்கர் பொறியாளர் வி குணசேகரன் மேலாளர் முனிராஜ் சுகாதார அலுவலர் மணிகண்டன் கட்டிட ஆய்வாளர் சுகதேவ் தேனி வடக்கு மாவட்ட ஜடி விங் தலைவர் 20 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மகேஸ்வரன் உள்ளிட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் அதிகாரிகள் நகர திமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நகர திமுக செயலாளர் ஆர் புருஷோத்தமன் நன்றி கூறினார்