அதிமுக முன்னாள் அமைச்சர் வீடு முற்றுகை..
கரூர் மாவட்டம் மல்லம் பளையம், முனியப்பனூர் அருகே உள்ள காவிரி ஆற்றில் சிலர் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியில் மணல் அல்ல உள்ளதாக முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம். ஆர்.விஜயபாஸ்கருக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது.

அதன் பெயரில் அதிமுக நிர்வாகிகள் சிலருடன் சென்ற எம்.ஆர் விஜயபாஸ்கர் அங்கு காவிரி ஆற்றில் மணல் அள்ளி கொண்டிருந்த 3 பொக்லைன் இந்திரங்கள் மற்றும் 5 மணல் லாரிகளை சிறைபிடித்தார்.

இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரின் காரை வெளியே எடுத்துச் செல்ல முடியாத அளவிற்கு மாட்டு வண்டிகளை நிறுத்தி அதிமுகவினரை சிறை பிடித்தனர்.

இதனை அடுத்து போலீசாரின் ஒத்துழைப்போடு அங்கிருந்து மாற்று பாதையில் வெளியேறினர்.இந்த நிலையில் நேற்று மாலை ஆண்டாங்கோவில் கீழ்பாகம் மில்கேட் பகுதியில் அமைந்துள்ள எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீட்டை முற்றுகை இடுவதற்காக சுமார் 20க்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மற்றும் வன்னியர் மக்கள் கட்சியின் தலைவர் சக்தி படையாச்சியார் தலைமையில் மாட்டு வண்டிகளை ஓட்டிக்கொண்டு கோவை சாலையில் எம்ஆர்.விஜயபாஸ்கரின் இல்லத்தை நோக்கி வந்தனர்.இதனை அடுத்து தகவல் அறிந்த போலீசார் அவரது வீட்டிலிருந்து சற்று தொலைவில் மணல் மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி வைத்தனர்.

இதனால் கோவை சாலையில் மாட்டு வண்டிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு குவிக்கப்பட்ட போலீசார் மாட்டு வண்டி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாட்டு வண்டி தொழிலாளர்கள் கூறுகையில் நாங்கள் விவசாயம் செய்து வருவதுடன் கால்நடைகள் வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களை செய்து வருவதாகவும்,மாட்டு வண்டிகளை வைத்து பிழைப்பு நடத்தி வருவதாகவும், இதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வருவதாகவும், காவிரி ஆற்றில் இருந்து உள்ளூர் தேவைகளுக்காக மணல் எடுத்து பிழைப்பு நடத்தி வருவதாகவும் கூறினர்.இந்த நிலையில் எம்.ஆர். விஜயபாஸ்கர் எங்களது வாழ்வாதாரத்தை கெடுக்கும் வகையில் மணல் அல்ல கூடாது எனக் கூறி போராட்டம் செய்து வருகிறார்.

இதனால் எங்களில் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் தொடர்ந்து கோவை சாலையில் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு எதிராக கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இருப்பினும் அவரது வீட்டை நோக்கி முற்றுகையிட முயன்றனர்.இதனை அடுத்து போலீஸ் உயரதிகாரிகள் அங்கு வரவழைக்கப்பட்டு மாட்டு வண்டி தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனை ஏற்றுக் கொண்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கரூர் மாட்டுவண்டி தொழிலாளர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீட்டை முற்றுகையிட வந்ததையொட்டி முன்னதாக போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *