தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தாராபுரம் பூளவாடி சாலையில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் பிரபு தலைமையில் ஆய்வு செய்தபோது பூளவாடி பிரிவு பகுதியில் சட்ட விரோதமாக ஆம்னி காரில் 450 கிலோ ரேஷன் அரிசி கொண்டு சென்றது தெரிய வந்தது. ரேஷன் அரிசி மற்றும் ஆம்னியை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தார்.