திருவொற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் புறநகர் ரயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்

40க்கும் மேற்பட்ட தொழிலாளர் சட்டங்களை திருத்தி அமைத்து தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் மற்றும் விதிகளை ரத்து செய்து தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை அணுசக்தி உற்பத்தியில் நுழைய அனுமதிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.


பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது இன்சூரன்ஸ் துறையில் நூறு சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் தலைமையில் அனைத்து தொழிலாளர் நல சங்கத்தினரும் ஜனநாயக மாதர் சங்கம் வாலிபர் சங்கம் மாணவர் சங்கம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி தண்டவாளத்தில் அமர்ந்துஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் அங்கு வந்த
சரக்கு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லக்கூடிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி யில் இருந்து சென்டிரல் செல்லும் மின்சார ரயில்களில் தொழிலாளர்கள் கொடியை பிடித்தவாறு ரயிலை மறித்து ரயிலில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாநகராட்சி கவுன்சிலர் ஆர். ஜெயராமன், சி. ஐ. டி. யூ. மாவட்ட செயலாளர் குப்புசாமி, அனைத்திந்திய மாதர் சங்க மாநில செயலாளர் ராதிகா உட்பட 300 பேரை வலுக்கட்டாயமாக போலீசார் இறக்கி கைது செய்து மாநகர பஸ்களில்
ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *