திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தாழம்பள்ளம் மற்றும் சளுக்கை ஆகிய கிராமங்களில் இரண்டு அலகாக நடைபெற உள்ளது.

அதன் தொடக்க விழா சளுக்கை உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் சி. ருக்மணி தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் மு‌‌‌.ரமணன் முன்னிலை வகித்தார். என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் ஞானமலர் வரவேற்றார்.


சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி வட்டாட்சியர் பி.ஞானவேல் பங்கேற்று, நாட்டு நலப்பணித் திட்டத்தின் நோக்கங்களை பற்றி விளக்கினார். மேலும் இந்த நிகழ்வில் வந்தவாசி வருவாய் ஆய்வாளர் லோகேஷ், விஏஓ மணிவண்ணன், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சாயீராபீவி, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜெயமணி, தபித்தாள், சளுக்கை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தேவராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *