செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஸ்ரீ வஜ்ரகிரி மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கோயில் மஹா சிவராத்திரி பூஜை நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளதாக ஸ்ரீ வஜ்ரகிரி மரகதாம்பிகை உடலரை பசுபதீஸ்வரர் அறக்கட்டளை சார்பில் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

அச்சிறுப்பாக்கம் ஸ்ரீ வஜ்ரகிரி மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் திருக்கோவிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு முதல் கால பூஜை இரவு 10 மணிக்கு இரண்டாம் கால பூஜை இரவு 12 மணிக்கு மூன்றாம் கால பூஜை தொடர்ந்து அதிகாலை
4 மணிக்கு நான்காம் கால பூஜை நடைபெற்று சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்படும். மேலும் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் திருமுறை பாராயணம் இரவு முழுவதும் நடைபெறும் என ஸ்ரீ வஜ்ரகிரி மரகதாம்பிகை உடலூறை பசுபதீஸ்வரர் அறக்கட்டளை
நிர்வாக அறங்காவலர் எஸ் தேவராஜன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *