கோவை, பீளமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளங்கலை ஆடை வடிவமைப்பு துறை மற்றும் அழகுத் துறை இணைந்து இவான்ஸா 26 எனும் ஆடை அலங்கார துறை தொடர்பான இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது..
முதல் நாள் நிகழ்வில் கிருஷ்ணம்மாள் கல்லூரி ஆடை அலங்கார வடிவமைப்பு துறை சார்ந்த மாணவிகளின் பல்வேறு திறன்களை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முன்னதாக கல்லூரியின் சேர் பெர்சன் நந்தினி தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில் , சிறப்பு விருந்தினராக மும்பை கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் குளோபல் பிசினஸ் டெவலப்மென்ட் தலைவர் திரு. ஸ்ரீ முருகன் தென்கொண்டார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்..
அப்போது பேசிய அவர், ஃபேஷன் என்பது ஆடைகளைத் தாண்டிய சிந்தனை மற்றும் சமூக வெளிப்பாடு என தெரிவித்தார்..
இரண்டு நாட்கள் நடைபெற உள்ள நிகழ்ச்சியில்,முதல் நாள்,ஆடை வடிவமைப்பு மற்றும் ஃபேஷன் பாடப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட 15 சுற்றுகளில் 150-க்கும் மேற்பட்ட பிரத்யேக ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டன. கல்லூரியின் அனைத்துத் துறைகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகள் ரேம்ப் வாக்கில் பங்கேற்றனர்.
ஆடைகளுக்கேற்ற ஒப்பனை மற்றும் சிகை அலங்காரங்களை அழகு மற்றும் ஆரோக்கியத் துறை (Beauty & Wellness) மாணவிகள் மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, முதலாம் ஆண்டு மாணவிகளின், ‘குழந்தைகள் ஆடைக் காட்சி’, இரண்டாம் ஆண்டு மாணவிகளின் கருப்பொருள் ஆடைக் காட்சிகள் நடைபெற்றன.
இதில் நடுவர்களாக . அனுபமா மாரிமுத்து, வருண்யா தேவி, ராதா நந்தகி டாக்டர் கவிதா ஷில்பா சுதர்சன் உள்ளிட்டோர் நடுவர்களாக இருந்தனர்.
பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு கைவினை மன்றத் தலைவர் ரூபா மோகன்தாஸ் மற்றும் தி நெசவு கோயம்புத்தூரின் நிறுவனர் உமா பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்…
நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் யசோதா தேவி,முதல்வர் ஹாரத்தி, இளங்கலை ஆடை வடிவமைப்பு துறை டீன் சாந்தி ராதாகிருஷ்ணன்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..
நிகழ்ச்சியில் நன்றியுரையை துறைத் தலைவர்கள் திவ்யா, இந்துமதி, உதவிப் பேராசிரியர் யமுனாதேவி ஆகியோர் வழங்கினர்..
மாணவிகளின் படைப்பாற்றலும் ஆசிரியர்களின் வழிகாட்டலும் இணைந்ததால், இவான்ஸா 26 ஆடை வடிவமைப்புத் துறையில் மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்திய முக்கிய கல்வி-கலாச்சார நிகழ்வாக அமைந்தது. குறிப்பிடதக்கது..