தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜூவ் நகர் பகுதியில் தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதித்து வைக்கப்பட்டிருப்பதாக கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப் படை உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் சுரேஷ், செல்லத்துரை, அருண் விக்னேஷ், சுரேஷ் மற்றும் மேற்கு காவல் நிலைய காவலர்கள் மணிகண்டன் திருப்பதி ஆகியோர் கொண்ட குழுவினர் ராஜூவ் நகர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் 14 மூட்டைகளில் பதிக்க வைக்கப்பட்டிருந்த தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த கரிசல்குளத்தைச் சேர்ந்த பெரிய குருசாமி, குருசாமி மற்றும் பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புையிலை பொருட்கள் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.