உத்தமபாளையத்தில் கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து அண்ணா திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தேனி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் தலைமையில்,தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், அகில இந்திய பார்வர்டு பிளாக், பாரதிய பார்வர்ட் பிளாக், பாட்டாளி மக்கள் கட்சி, தென்னிந்திய பார்வர்ட் பிளாக், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி,புரட்சி பாரதம் கட்சி, மக்கள் முன்னேற்ற கழகம், ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம், ஆகிய கட்சிகளின்தேனி மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் முன்னிலையில்,உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணா திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர்கள் கலந்து கொண்டு விடியா திமுக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தில் உத்தமபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.கல்யாணக் குமார்
உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.வினோத் குமார்
உத்தமபாளையம் பேரூர் கழக செயலாளர் எம்
.சக்கரவர்த்தி உள் பட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக அண்ணா திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்