இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கமுதி பேருந்து நிலையம் அருகே அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு, மத்திய அரசு அறிவித்த 125 நாள் வேலை திட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி, மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை வழங்கியும், ஏற்கனவே தேர்தல் அறிக்கையில், குறிப்பிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் காளிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் கருமலையான், வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முனியசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். அவைத்தலைவர் சேகரன் முன்னிலை வகித்தார்.

மாநில விவசாய அணி இணைச் செயலாளர் பெரியசாமி , வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராம்கோ வழி விட்டான், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் வேந்தன்,அன்பரசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டி, மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் செல்வமேரி, அமமுக சார்பில் மாநில மருத்துவரணி துணைச் செயலாளர் கபிலன், மாநில ஜெ பேரவை துணைத் தலைவர் முத்துராமலிங்கம், தெற்கு ஒன்றிய செயலாளர் வேப்பங்குளம் முத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், நகர செயலாளர் சிங்ககுட்டி மணிமுருகன் குட்டி மோகன பாலன், பாஜக மாவட்ட துணைத் தலைவர் கணபதி, ஒன்றிய செயலாளர் வேலவன் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *