தர்மபுரி மாவட்டத்தில் தற்போது பல்வேறு அரசு பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலக்கியம்பட்டி ஊராட்சி ஒன்றி துவக்க பள்ளி மாணவ மாணவிகளின் கண்களை கவரும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு2024- 2025 ஆண்டுக்கான கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள
செய்திருந்தனர். மாணவ மாணவிகளின் கவிதை, சிலம்பாட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .
இந்த ஆண்டு விழாவானது பள்ளி மாணவ மாணவிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் சுற்று வட்டார ஏராளமானோர் இந்த ஆண்டு விழாவை கண்டு களித்தினர்.