கரூர் செய்தியாளர் மரியான்பாபு..
கரூர் மாவட்டம் மண்மங்கலம்,நெரூர் தென்பாகம், புதுப்பாளையம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஆதி பகவதியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
முன்னூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஆதி பகவதியம்மன் கோயில் ஊர் பொதுமக்கள் சார்பாக புதிதாக கட்டி முடிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.இந்நிகழ்வில் யாகசாலை வேள்வி செய்து புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. இந்த மஹா கும்பாபிஷேகம் விழாவில்
அதே கிராமத்தில் பிறந்தவருமான பா ம க கரூர் மாவட்ட செயலாளருமான பி
எம்.கே .பாஸ்கரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுசாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கலசத்திற்கு தீர்த்தம் ஊற்றும் போது ஓம் சக்தி பராசக்தி என்று கோஷம் எழுப்பினர்.