C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
கடலூர் மாவட்டம் கடலூரில் மூன்றாம் புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு அரங்குகள் அமைப்பதற்கான கால் கோல் நடும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில், கடலூரில் மூன்றாம் புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு மஞ்சக்குப்பம் மைதானத்தில் அரங்குகள் அமைப்பதற்கான கால் கோல் நடும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் பா.தாமரைச்செல்வன், ஆணையாளர் மரு.எஸ்.அனு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் இரா.சரண்யா ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் கடலூர் நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா, மஞ்சக்குப்பம் மைதானத்தில் 22.03.2025 முதல் 31.03.2025 வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
புத்தகத்திருவிழாவில் 100 எண்ணிக்கையிலான புத்தக அரங்குகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான மேடை, எழுத்தாளர்கள் மற்றும் சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்கும் மேடை அரங்குகள், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், பாரம்பரிய உணவு அரங்கம், மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோளரங்கம், முப்பரிமான காட்சியரங்கம், வி.ஆர்.அரங்கம், புத்தக வாசிப்புக் கூடம் போன்றவை ஏற்படுத்துவதற்கான கால் கோல் நடும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜபூபதி, மாவட்ட நூலக அலுவலர் முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.