எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் மாசி மாத பௌர்ணமி கிரிவலம் சிவாய நம ஓம் என பக்தி முழுகத்துடன் பக்தர்கள் வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக் கோயிலில் சிவபெருமான் மூன்று ரூபங்களில் காட்சியளிக்கிறார். திருஞானசம்பந்தர் ஞானம் பெற்ற ஸ்தலம், காசிக்கு இணையாக அஷ்ட பைரவர்கள் அருள்பாளிக்கும் ஒரே ஸ்தலம் என பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோயிலில் மாசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பௌர்ணமி கிரிவலம் நடைபெற்றது. முன்னதாக கிழக்கு ராஜகோபுரம் பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சந்நிதியில் வழிபாடு மேற்கொண்ட பக்தர்கள் கீழ வீதி வழியாக தெற்கு வீதி,மேலவீதி, வடக்கு வீதி வழியாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தனர்.
கிரிவலத்தின் போது ஆபத்து காத்த விநாயகர், கணநாதர்,சொர்ணாகர்ஷன பைரவர், சித்திவிநாயகர், கோமளவல்லி அம்மன் ஆகிய கோயில்களில் கிரிவல பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபட்டு செல்லும் வழியில் சிவாய நம ஓம் என பஞ்சாக்ஷரம் மந்திரம் உச்சரித்த வாறே சென்றனர்.