தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்,

தஞ்சாவூர், பிப்- 14.
தஞ்சை மாவட்டத்தில் ஹஜ் புனித பயணம் செல்ல 326 பேருக்கு அதிநவின முழு உடல் பரிசோதனை முடிந்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஹஜ் புனித பயணம் செல்ல இலவசமாக அதி நவீன முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9 ம் தேதி ஹஜ் புனித பயணம் செல்லும் நபர்களுக்கான அதிநவீன முழு உடல் பரிசோதனை தொடங்கப்பட்டது. இந்த பரிசோதனையில் நாள் ஒன்றுக்கு 65 பேர்களுக்கு அதிநவீன முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டன. நேற்றுடன் முடிவடைந்த இந்த பரிசோதனையில் 326 பேர் ஹஜ் புனித பயணம் செல்ல தகுதியானவர்கள் என்று மருத்துவர்களால் சான்றளிக்கப்பட்டது. இவர்களுக்கு மருத்துவ தகுதிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவாதி தலைமை வகித்து, 326 பேருக்கு மருத்துவ தகுதி சான்றிதழ் வழங்கினார். அப்போது தமிழ்நாடு ஹஜ் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் உறுப்பினர்கள் முகமது நிஷார், முகமது ரபிக், ஆசிப்அலி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராமசாமி, நிறைய மருத்துவ அலுவலர்கள் செல்வம், அமுத வடிவு, துணை நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமது இத்ரியாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இரத்த அழுத்தம், இசிஜி, சர்க்கரை அளவு, ரத்த பரிசோதனை, எக்கோ, எக்ஸ் ரே,
எம்.ஆர்.ஐ. ஸ்கேன், நுரையீரல் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *