துறையூர் பிப் -14
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருச்சி திமுக வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர் சோபனபுரம் எஸ்.கனகராஜ் தலைமையில் உப்பிலியபுரம் திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்துசெல்வன், அர.ந.அசோகன் முன்னிலையில் 12/02/2026 அன்று உப்பிலியபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்புறம் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பிற்கான நிதி மற்றும் மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள நூறு நாள் வேலை பெயரை மாற்றியதை கண்டித்தும் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்ததாக பாஜக அரசை கண்டித்தும் அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


இந்த ஆர்ப்பாட்டத்தில் பேரூர் கழக செயலாளர்கள் நடராஜன்,வெள்ளையன், மு.ஒன்றிய கவுன்சிலர் ஜெகநாதன், மாவட்ட பிரதிநிதி ஸ்ரீதர், அறிவொளி சுப்பிரமணியன், தமிழ் நாடு உணவு ஆணையம் உறுப்பினர் கணேசன்,முன்னாள் ஊராட்சி தலைவர்கள் லதா தனபால்,ராஜா மரியதாஸ் மற்றும் வைரி மணிகண்டன், தளுகை பாலன், தீனா,எம்ஜி பாலா,வரதராஜ், கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மற்றும் காங்கிரஸ்,மதிமுக, வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *