பெரியகுளம் நகரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 5000 வரவு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் நகரில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஒரே மாதத்தில் ரூபாய் 5000 மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இதனை கொண்டாடும் வகையிலும் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி உத்தரவின்படி பெரிய குளம் நகரச் செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் திமுக வழக்கறிஞர் சிவக்குமார் உட்பட நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்