தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி பங்கேற்பு
கோவை போத்தனூர் சாலையில் கோவை மோட்டார் பைக்ஸ் எனும் இரு சக்கர வாகன விற்பனை மையத்தை தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி துவக்கி வைத்தார்
கோவை போத்தனூர் சாலையில் உள்ள ராசி ஃபுட் எதிரில் கோவை மோட்டார் பைக்ஸ் எனும் இரு சக்கர வாகன விற்பனை மைய துவக்க விழா நடைபெற்றது..
எல்லா விதமான பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் விற்பனை மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சர்வீஸ் பிரிவும் துவங்கப்பட்டுள்ள கோவை பைக்ஸ் புதிய ஷோரூம் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி கலந்து கொண்டு கோவை பைக்ஸ் ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்..
விழாவில் அவருடன், கோல்டு பாஷா , ரஹ்மத்துல்லா ,மற்றும் பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் டிஸ்கோ காஜா உசேன் பூக்கடை சுலைமான் பகதூர் அசாருதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்…
புதிதாக திறக்கப்பட்டுள்ள கோவை பைக்ஸ் விற்பனை மையத்தில் முன்னனி நிறுவனங்களின் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்படுவதாகவும்,அதே நேரத்தில் குறைந்த முன் பணம் கட்டி, எளிதான லோன் வசதிகளுடன்,உடனடியாக வாடிக்கையாளர்கள் புதிய வாகனத்தை பெற்று செல்லலாம் என கோவை பைக்ஸ் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்தனர்…