தருமபுரி மாவட்டம், தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை நூப் ட்ரோன் பிரைவேட் லிமிடெட் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்த பரிமாற்ற நிகழ்ச்சி ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியின் நிறுவனர் அரிமா சுப்பிரமணி, தாளாளர் டாக்டர் கோவிந்த் மற்றும் நூப் ட்ரோன் பிரைவேட் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி பாலாஜி ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
கல்லூரி செயலாளர் காயத்ரி சுப்பிரமணியம், அறங்காவலர் காயத்ரி கோவிந்த், கல்லூரி முதல்வர் தமிழரசு, கல்லூரி துறைத் தலைவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொறியியல் திறன் மேம்பாடு, ஆலோசனை, R&D சேவைகள், தொழில்துறை பயிற்சிகள், இன்டர்ன்ஷிப் திட்டங்கள், காப்புரிமை தாக்கல், வேலை வாய்ப்புகள் மற்றும் தொடர்புடைய சேவைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் மேற் கொள்ளப்பட்டது.
நிகழ்வில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.