நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா,மக்கள் தொடர்பு முகாமில் 246 பயனாளிகளுக்கு ரூ.74.40 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடவும், வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு இருப்பதற்கு பாதுகாப்பான வீடு தேவை என்பதை கருத்தில் கொண்டு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் வழங்க உத்தரவிட்டு நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.204.74 கோடி மதிப்பீட்டில் 5,800 பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு கிராம சபை நடத்தப்பட்டு கலைஞரின் கனவு இல்லம் 2025-26 மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டம் 2024-25 ஆகிய இரண்டு திட்டங்களுக்கு தகுதியான பயனாளிகள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களும் இளைஞர்களை ஊக்குவித்திட விளையாட்டு துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 322 ஊராட்சிகளுக்கு கிரிக்கெட், கையுந்துப் பந்து, எறிபந்து, கால்பந்து, டென்னிக்காய்ட், ஸ்கிப்பிங், கேரம், சிலம்பம், செஸ், கபாடி, இறகுப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு தேவையான உபகரணங்கள், உடற்பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் டி ஷர்ட், விசில், கோன்ஸ், தொப்பி ஆகிய 33 உபகரணங்களின் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் செல்போன் பயன்பாடு குறைந்து, மன அழுத்தம் காரணமாக உடல்நலன் மற்றும் மன நலன் பாதிப்படைவது குறைக்கப்படும். விளையாட்டினால் இளைஞர்கள் மனநலன் மேம்படும்.

பொதுமக்கள் அரசு அலுவலகங்களை தேடி தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கி வந்த நிலையில், பொதுமக்களை தேடி அனைத்து துறை அரசு அலுவலர்களும் அவர்களது கிராமங்களுக்கே சென்று கோரிக்கைகளை நிறைவேற்றிட மாதம் ஒரு முறை மக்கள் தொடர்பு திட்ட முகாமினை நடத்திட உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி இன்றைய தினம் பரமத்தி வேலூர் வட்டம், பிள்ளகளத்தூர் கிராமத்தில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 246 பயனாளிகளுக்கு ரூ.74.40 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி கொண்டு தங்கள் உடல்நலனையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா, தெரிவித்தார்.

முன்னதாக வருவாய்த்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வனத்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, பட்டு வளர்ச்சி துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, பார்வையிட்டார்.

தொடர்ந்து, மக்கள் தொடர்பு திட்ட முகாமில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2,000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.40 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், வேளாண்மை துறை சார்பில் 3 விவசாயிகளுக்கு ரூ.1,650/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள், வேளாண் பொறியியல் துறை சார்பில் 2 விவசாயிகளுக்கு ரூ.4.54 இலட்சம் மதிப்பில் பவர் டில்லர், மகளிர் திட்டம் சார்பில் 4 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3.00 இலட்சம் மதிபிபல் கடனுதவி, 2 பயனாளிகளுக்கு நலிவுற்றோர் நிதி உதவி, 43 நபர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள், தொழிலாளர் நலத்துறை சார்பில் 10 நபர்களுக்கு ரூ.17,800/-மதிப்பில் நலத்திட்ட உதவிகள், வருவாய்த்துறை சார்பில் 157 பயனாளிகளுக்கு ரூ.26.23 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், கூட்டுறவுத்துறை சார்பில் 7 விவசாயிகளுக்கு ரூ.7.77 இலட்சம் மதிப்பில் பயிர்க்கடன், 2 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.13.00 இலட்சம் மதிப்பில் கடனுதவி, தாட்கோ சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2.00 இலட்சம் மதிப்பில் ஆடு வளர்ப்பு கடனுதவி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 3 மகளிருக்கு ரூ.17,400/- மதிப்பில் தையல் இயந்திரம், முன்னோடி வங்கி சார்பில் 1 நபருக்கு ரூ.10.00 இலட்சம் மதிப்பில் கடனுதவி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கல்வி நிதி ஆதரவு திட்டம் சார்பில் 4 நபர்களுக்கு ரூ.2.88 மதிப்பில் நிதியுதவி என மொத்தம் 246 பயனாளிகளுக்கு ரூ.74.40 இலட்சம் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பரமத்தி திமுக ஒன்றிய கழக செயலாளர் மற்றும் அட்மா குழுத்தலைவர்
.பி.பி.தனராசு, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி சே.சுகந்தி, மற்றும் அனைத்து அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *