துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டாரத்தில் 2024 ஆம் ஆண்டு தென்கிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை 18/03/2025 அன்று மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீராம் நேரில் சென்று சிறப்பு ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நெல்,மக்காசோளம், வெங்காயம் பயிரிட்டு இருந்தனர். அப்போது பெய்த தென் கிழக்கு பருவமழையால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது.இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்வி குறியானது. இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் கிழக்கு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து துறையூர் பகுதிகளில் தென் கிழக்கு பருவ மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆதனூர், சிங்களாந்தபுரம், கீரம்பூர் ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 639 விவசாயிகளின் விவசாய நிலங்களை மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீராம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது துறையூர் சமூக நலத்துறை வட்டாட்சியர் சத்ய நாராயணன், மாவட்ட வழங்கல் அலுவலக வட்டாட்சியர் ரமேஷ், வேளாண்மை துறை உதவி இயக்குநர் வீரமணி, வேளாண்மை உதவி அலுவலர்கள் மனோகரன், முருகானந்தம், வருவாய் ஆய்வாளர் இளவரசி, கிராம நிர்வாக அலுவலர்கள் பொன்மலர்(சிங்களாந்தபுரம்), ஜெயந்தி (ஆதனூர்) உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து சிங்களாந்தபுரத்தில் உள்ள நியாயவிலை கடையில் மாவட்ட வழங்கல் அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில் பொருட்களின் இருப்பு குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களை ஆய்வு செய்தார்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *