தாராபுரம் 8 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்துகளை அமைச்சர்கள் மற்றும் எம்பி துவக்கி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 5 புறநகர் பேருந்துகள் புதிய வழித்தட பேருந்துகளை துவக்கி வைத்தனர். இதில் மேட்டுப்பாளையம் முதல் தஞ்சாவூர் வரையிலும், கோயமுத்தூர் முதல் பழனி வரை, ஈரோடு முதல் மதுரை வரை, திருப்பூர் முதல் புதுக்கோட்டை வரை, திருப்பூர் முதல் திண்டுக்கல் வரை ஆகிய 5 வழித்தட புதிய பேருந்துகளையும், மூன்று நகர பேருந்துகளான தாராபுரம் முதல் மணக்கடவு வரை, தாராபுரம் முதல் பொன்னிவாடி வரை, தாராபுரம் முதல் அலங்கியம் வரை என 3 நகர பேருந்துகளும் துவக்கி வைக்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் ஈரோடு எம்பி பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 8 புதிய வழித்தட பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன், நகர கழக செயலாளர் முருகானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர்,முன்னாள் எம்எல்ஏ பிரபாவதி பெரியசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்பசாமி, அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் முத்துக்குமாரசாமி, துணை மேலாளர் ஜோதி மணிகண்டன், உதவி மேலாளர் சேதுபதி, கிளை மேலாளர் கணேசன் மற்றும் திமுக நிர்வாகிகள் தாராபுரம் அரசு போக்குவரத்து கிளை ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *