திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பாக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தாராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் அமைச்சர். மு.பெ .சாமிநாதன் அவர்கள் (செய்தித்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர்,கழக துணை பொதுச் செயலாளர்) அர. சக்கரபாணி அவர்கள், (உணவு மற்றும் உணவு பொருள்கள் வளங்கள் துறை அமைச்சர் மற்றும் கயல்விழி செல்வராஜ் அவர்கள், (மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள்), திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர், திருப்பூர் நான்காம் மண்டல தலைவர், மரியாதைக்குரிய
இல.பத்மநாபன் அவர்கள் மற்றும் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பி எஸ் சீனிவாசன் அவர்கள் தலைமையில்,
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் , தொகுதி பொறுப்பாளர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இளைஞரணியிற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகள் மற்றும் எதிர்வரும் மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு ஆயத்தப் பணிகள் குறித்து மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் ஆலோசனை வழங்கினர்.
திருப்பூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், கழக இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய , நகர , பேரூர் கழக நிர்வாகிகள், முன்னாள் இன்னாள் கழக நிர்வாகிகள் மற்றும் அனைவரும் கலந்து கொண்டனர்.