திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் தமிழர்களின் பாரம்பரிய குதிரை பந்தயம் பூண்டியார் நினைவு திருவாரூர் மாவட்ட குதிரை வளர்ப்போர் மற்றும் சாரதிகள் நலச் சங்கத்தின் சார்பில் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
இப்போட்டியினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கொடியசைத்த துவக்கிவைத்தார். இதில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் புதிய குதிரை , சிறிய குதிரை நடுக்குதிரை என 4 பிரிவு குதிரை பந்தயம் போட்டிகள் சுமார் 10 கிலோமீட்டர் வரை கொடராச்சேரி தஞ்சாவூர் பைபாஸ் சாலையில் நடைபெற்றது.
நடைபெற்ற குதிரை பந்தயம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் ,
ரூபாய் 20 ஆயிரம் , 30 ஆயிரம் , 40 ஆயிரம் , 50 ஆயிரம் என பிரிவு வாரியாக ரொக்க பரிசுகளும் வழங்கினர்.
தமிழர்களின் பாரம்பரியமிக்க குதிரை பந்தயம் போட்டியினை ஏராளமான பொதுமக்கள் சாலைகளின் இருவீதிகளிலும் நின்று கண்டு ரசித்தனர் .