16.2.2026.

நாமக்கல் மாவட்டம், மோகனூர், எருமப்பட்டி ஆகிய பகுதிகளில் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவி குழுவினருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி (15.02.2026 மாலை) நடைபெற்றது.

இதில், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கு செல்வராசு தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் KRN. இராஜேஷ்குமார் கலந்துகொண்டு, 1,200-க்கும் மேற்பட்ட மகளிருக்கு, QR குறியீடுடன் கூடிய, மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் அடையாள அட்டைகளையும் அவர் வழங்கினர்.

அப்போது நிகழ்ச்சியில், சிறப்புரையாற்றிப் பேசிய, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் KRN. இராஜேஷ் குமார்,

தமிழகத்தில் மகளிர் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடனுதவிகளை அதிக அளவில் மகளிர் குழுவினருக்கு வழங்கப்பட்டு உரிய காலத்தில் அவை திரும்ப பெறப்படுகின்றன. மகளிர் சுய உதவி குழு கடன் திட்டங்கள் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவிலான சேமிப்பை மகளிர் பெற்று வருகின்றனர்.

மேலும், மோகனூர் பகுதிக்கான தனியாக, ரூ. 23 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. தமிழக முதல்வர் சமீபத்தில் மகளிர்க்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கிய நிதி மூலம் ஏழை குடும்பங்கள் பெரிதும் பயனடைகின்றன.

தமிழக அரசு மகளிர்க்கு மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம், நாட்டிலேயே முன்னோடி திட்டமாக காலை உணவு திட்டம், இதுபோன்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றும்,
கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.

மகளிர் சுய உதவி குழுவினருக்கு இன்று வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை மூலம், பேருந்துகளில் தங்கள் பொருட்களை இலவசமாக எடுத்து செல்லலாம்., கோ ஆப் டெக்ஸ் விற்பனையங்களில் கழிவு வழங்கப்படும்., மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. ஆவின் பொருட்கள் கட்டண சலுகை, இதனை மகளிர் சுய உதவி குழுவினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் KRN. இராஜேஷ்குமார் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மோகனூர் பேரூராட்சி தலைவர் வனிதா, துணைத் தலைவர் சரவணகுமார், உறுப்பினர்கள் செல்லவேல், குமரவேல், மகளிர் சுய உதவி குழுவினர் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *