செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பிரணவ மலையில் அமைந்திருக்கும்
கைலாசநாதர் கோயிலில் மஹா சிவராத்திரி நாட்டிய விழா

வெகு விமர்சையாக நடைபெற்றது கைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 09:00 மணிமுதல் 10:30 மணி வரை வளர்கலை நாட்டியாலயாவில் பயிலும் திருப்போரூர், சோத்துப்பாக்கம், மதுராந்தகம் பகுதி மாணவிகள் 28 பேர்
நாட்டிய அர்ப்பணம் செய்தனர்.

மேலும் பிரணவ மலையில் திரண்டியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் விநாயகர் கவித்துவம், பாரதியார் பாடல் நடனம், நடேஷ கவித்துவம், பச்சை மயில் வாகனனே, ஆண்டாள் கவித்துவம், திரௌபதி நடனம், சின்ன கண்ணன் பதம், சிவன் சக்தி ஆடிய தாண்டவ லாஸ்யம் என அனைவரும் மெய்சிலிர்க்கும் வகையில் பரத நாட்டியம் ஆடினர்.

இந்நிகழ்விற்கு வளர்கலை நாட்டியாலயா நிறுவனர் கலை வளர்மணி வனிதா சீனிவாசன் தலைமை தாங்கினார்.திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் ஒருங்கிணைப்பு குழு,அர்த்தஜாமம் மற்றும் பள்ளியறை வழிபாட்டு குழு நிகழ்வை
சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். ஆனந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *