செங்குன்றம் செய்தியாளர்

சென்னை மாநகராட்சி , மண்டலத்திற்குட்பட்ட மாதவரம் 31 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கதிர்வேடு அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

முன்னதாக ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் ஒரு தளம் கொண்ட பள்ளி கட்டிடத்திற்கு பூமி பூஜைகள் நடத்தப்பட்டு தொடர்ந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் அங்குள்ள விளையாட்டு திடலுக்கு புதிதாக பார்வையாளர் கூடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்று அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாதவரம் மண்டல அதிகாரிகள், பொறியாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசி காந்த் எம்பி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் , மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு ஆகியோர்கள் பூமி பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் மண்டல குழு தலைவர் நந்தகோபால், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் காங்கை குமார் மாவட்ட பொறுப்பாளர் ஏ.ஜி.சிதம்பரம், முன்னாள் மாவட்ட தலைவர் திருவேற்காடு டி.ரமேஷ், திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சமூக சேவகர் எம்.பாபு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *