திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா தாளடி அறுவடை பணிகள் தீவிரமடைந்து வருகின்றனர் அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் கிராமத்தில் விவசாயிகள் விவசாயக் கூலி தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் விவசாயிகள் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி பணிகளை மேற்கொண்டு வந்தனர் தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த அருள்ஜோதி என்பவர் சாலை ஓரமாக ஒரு இடத்தை ஆக்கிரமித்து உள்ளனர்.

இதனால் இந்த இடத்தின் வழியாக யாரும் அறுவடை இயந்திரத்தை கொண்டு செல்லக்கூடாது என அறுவடைக்கு சென்ற அறுவடை இயந்திரத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் அந்த பகுதி விவசாயிகள் இயந்திரத்தைக் கொண்டு அறுவடை செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் இருந்து வருவதால் உடனடியாக இந்தப் பகுதி விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகள் அறுவடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பாதையை பொது பாதையாக மாற்றி தர வேண்டும் வருங்காலங்களில் விவசாயிகள் விவசாயப் பணியை மேற்கொள்ள புதிய சாலை வசதியை மேம்படுத்தி தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *