செங்குன்றம் செய்தியாளர்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் , மாதவரம் மேற்கு பகுதி கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு மாதவரம் , பொன்னியம்மன்மேடு , தணிகாசலம் நகரில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாதவரம் 30 வார்டு வட்டக் கழகச் செயலாளர் ஜெ.காமேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் மாதவரம் வி. மூர்த்தி பங்கேற்று முதலாவதாக ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி அனைவரும் மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் , திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்திக்கு 10 அடி உயரமலர் மாலை கிரேன் மூலமாக
அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தினார்கள்.

மாதவரம் பொன்னியம்மன்மேடு சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆண்கள் பெண்கள் என 2000 பேர் வந்திருந்த அனைவருக்கும் புடவை , தண்ணீர்குடம் , வெஜ்பிரியாணி , வேஷ்டி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி சட்டை மற்றும் மாற்று திறனாளி ஒருவருக்கு மின்சார மூன்று சக்கர வண்டியும் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டது.

மேலும் அப்பகுதியை சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கு ,அவர்கள் குடும்பத்தில் யாராவது மரணம் அடைந்து விட்டால் அவர்களுக்கு அமரர் ஊர்தியும் , சாமினா பந்தல் , இருக்கைகள் , குளிரூட்டப்பட்ட பெட்டி போன்ற அனைத்து பொருட்களையும் வட்ட கழக செயலாளர் ஜெ.காமேஷ் இலவசமாக வழங்க முன்வந்துள்ளார்.

இதில் பகுதிச் செயலாளர் வேலாயுதம், சாந்தி எத்திராஜன், வழக்கறிஞர் பிரகாஷ் உட்பட கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *