திருவாரூர்

காரைக்கால் மற்றும் காவேரி அசட் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு சேமிப்பு வாரம் பிப்ரவரி 1 முதல் 15 தேதி வரை கொண்டாடப்பட்டது.

அதனை முன்னிட்டு ஊழியர்களும் ONGC பப்ளிக் பள்ளி மாணவர்களும் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வுப் மனித சங்கிலி நிகழ்ச்சி ஒ.என்.ஜி.சி அலுவலகம் பெரியார் அரங்கில் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஓவிய போட்டி வேலுடையார் கல்வியியல் கல்லூரி மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு போட்டியும் மற்றும் திருப்பட்டினம் பகுதி பள்ளிகள் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ, மாணவியர்களும்,ஓ.என்.ஜி. சி ஊழியர்கள் பணியார்களின் இல்லதரசிகள் மற்றும் ஓட்டுனர்களும் கலந்து கொண்ட போட்டிகளும் நடைபெற்றது.

இப்போட்டிகளில் பங்கேற்ற வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் அசட் மேனேஜர் பொறுப்பு அதிகாரி சுதிஷ் குமார் தலைமை வகித்தார். இவ்விழாவில் குழும பொது மேலாளர் இளங்கோவன் முதன்மை பொதுமேலாளர்கள் கிரிராஜ் திமன் கோகய் மற்றும் உயர் அதிகாரிகள் மற்றும் மாணவ மாணவியர் பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியை சந்தியா ராணி அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசட்மேனேஜர் சுதிஷ்குமார் விழிப்புணர்வு குறித்தும் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றோரை பாராட்டி பேசினார்.

பொதுமேலாளரும் நிகழ்ச்சியின் பொறுப்பாளருமான சுரேஷ்பாபு நிகழ்வு பற்றிய தரவுகளை விளக்க உரையாற்றினார். அதனை தொடர்ந்து அவசர பாதுகாப்புகளும் குறித்து பொதுமேலாளர் சுரேஷ் பேசினார்.

நிகழ்வில் ஓ.என்.ஜி.சி பணியிடங்களில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து முருகானந்தம் பேசினார். நிகச்சியின் நிறைவாக பொது மேலாளர் அசோகன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *