தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடந்தது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்தது
தமிழக முதல்வர் திருநங்கைகளுக்கான குறைகளை நிவர்த்தி செய்திடவும் அவர்களுக்கு ஏற்படும் குறைகளை தீர்த்து வைப்பதற்காகவும் அவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
இதன் அடிப்படையில் 40 வயதுக்கு மேல் உள்ள திருநங்கைகளுக்கு ஓய்வு அதிகமாக ரூபாய் 1500 வழங்கப்பட்டு வருகிறது இதுவரை 24 திருநங்கைகள் ஓய்வுதியம் பெற்று வருகின்றனர் தேனி மாவட்டத்தில் 349 திருநங்கைகள் உள்ளனர் அவர்களில் 130 பேர்களுக்கு திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது
இன்றைய தினம் நடைபெற்ற முகாமில் வீட்டுமனை கல்வி கடன் ஆதார் அட்டை சுய தொழில் தொடங்க கடன் திருநங்கை அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்து தரக் கோருதல் என்று பல்வேறு கோரிக்கை அடங்கிய 17 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் திருநங்கைகள் வழங்கினார்கள்
இந்த கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் சாந்தி மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி மற்றும் அரசு அலுவலர்கள் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி மிகச் சிறப்பாக செய்திருந்தார்