வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலய பாடைக்காவடி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ பாடைக்கட்டி மகா மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் 5000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலைசிறந்த சத்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் தலை சிறந்த பாடைகட்டி திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஸ்ரீ பாடைக்கட்டி மகா மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் இலை போட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த அன்னதானம் நிகழ்வை திருவாரூர் சங்கரநாராயண பீடாதிபடி ஸ்ரீ ஸ்ரீ சங்கர தீர்தர் சுவாமிகள் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் காலை 10 மணி முதல் மாலை வரை 5000 பக்தர்களுக்கு இலை போட்டு அன்னதானம் பரிமாறப்பட்டது. அன்னதானம் வழங்கும் நிகழ்வை ஸ்ரீ பாடைக்கட்டி மகா மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்க தலைவர் எம்.எம். சண்முகவேல், செயலாளர் பி. சாமிநாதன், சங்க ஆலோசகர் இரா. செல்வம் தலைமை பூசாரியார், பொருளாளர் வி.எஸ். குமார், துணைத் தலைவர்கள் என். மாரிமுத்து, ப.பெத்த பெருமாள், கோ. சண்முகசுந்தரம் யாதவ், சங்க துணை செயலாளர்கள் Rtn க. குமரன்,எம்.சத்யா ( எ) கலியபெருமாள் வி ஏ வி சூரியமூர்த்தி, சங்க மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் வெங்கடேஷ் சம்பத் எம்பிபிஎஸ், சங்க விளம்பரம் மற்றும் ஊடக பிரிவு செயலாளர் க. அப்பு( எ) ரத்தீஷ் பாபு மற்றும் நிர்வாக குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.