திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த அய்யம்பாளையத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி நமீதா, நேற்று தனது தாயாருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தாய் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்னை
க.மாரிமுத்து.