கரூர் செய்தியாளர் மரியான் பாபு நொய்யல் செல்லாண்டியம்மன் கோயில் பூசாரியை தாக்க முயன்றவர்கள் மீது தக்க நடவடிக்கை கோரி பொதுமக்கள் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தீனதயாளன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
கரூர் மாவட்டம் புகலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வேட்டமங்கலம் ஊராட்சி நொய்யல் செல்லாண்டியம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலாகும் வேட்டமங்கலம் கிராமத்தைச் சுற்றியுள்ள 18 குக்கிராமங்களுக்கு இந்த கோயில் சொந்தமானது. கோயிலுக்கு நிலங்களும் சொந்தமாக பல உள்ளது.

இத்திருக்கோயிலுக்கு பணிவிடை செய்யும் பூசாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சுமார் 84 ஏக்கர் நிலத்தினை அதே பகுதியைச் சேர்ந்த திமுக கிளைச் செயலாளர் மோகன்ராஜ், ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண்கள் கொட்டியது தொடர்பாக செல்லாண்டியம்மன் கோயில் பூசாரி அப்பன் சம்பத் தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்பகுதியை திமுக கிளைச் செயலாளர் மோகன்ராஜ் ,தகாத வார்த்தைகளால் திட்டியது குறித்து கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சிஎஸ்ஆர் நகல் பெறப்பட்டுள்ளது.இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பதால், இன்று 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் நடவடிக்கை கோரி புகார் மனு அளித்தனர்.பின்னர் செய்தியாளரிடம் பேசிய வழக்கறிஞர் அகஸ்டின், கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற செல்லாண்டியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயலும் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அந்த மனுவினை மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்துள்ளார். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இக்கோயில் பூசாரி ஒருவர் ஏற்கனவே மர்மமான இருந்துள்ளார். தற்போதுள்ள பூசாரி அப்பனுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *