திருவொற்றியூர். பிப். 18

எண்ணூர் கடற்கரை சாலையில் மயான கொள்ளையை பார்க்க குவிந்த பக்தர்கள்.
திருவொற்றியூர் எண்ணூர் கடற்கரைசாலையில் 800 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி அமாவாசை முன்னிட்டு மயான கொள்ளை வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.


அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் முன்பு அனைத்து வகையான ஒரு டன் காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்களால் அலங்கரிக்கபட்டு அசுரன் உருவில் அமைத்து வைத்தனர்.


முன்னதாக திருவொற்றியூர் எல்லையம்மன் கோவிலில் இருந்து சித்தாந்து ஆடை அணிந்து உடுக்கை பம்பை முழங்க அம்மன் வேடமிட்டு பெண்கள் ஆடிவந்னர்
இதனையடுத்து சக்தி அம்மாஆவேசத்துடன் ஓடி வந்து சூலத்தில் அசுரனை வதம் செய்து காய்கறிகளை சூறையிட்டனர்.இதில் ஏராளமான பக்தர்கள் காலை முதலே காத்திருந்து அங்காளம்மன் அசுரனை வதம் செய்த சூறை காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *