திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் சார்பில்
திருச்சி புத்தகத் திருவிழா 2026 சிஎஸ்ஐ செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பிப்ரவரி 14 முதல் 22ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது
திருச்சி புத்தகத் திருவிழாவில் திருச்சி மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார், மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் அல்லிராணி,எழுத்தாளரும் ஆவணப்பட இயக்குனருமான பாரதி கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில்
மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யா தேவி மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளரும், தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம் சுற்றுச்சூழல் சமூகப்பணிக்காக பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் அரங்கு எண் 17 ல் பத்மஸ்ரீ தாமோதரன், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் முனைவர் கி.சதீஸ்குமார், இனணச்செயலாளர் ஆர்.கே.ராஜா, மக்கள் சக்தி இயக்க துணைச் செயலாளர் வெ.இரா.சந்திரசேகர், முனைவர் ஜெயலட்சுமி, டாக்டர் லட்சுமி, திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க செயலாளர் விஜயகுமார், முனைவர்.நெடுஞ்செழியன் உட்பட பலர் பாராட்டினர்.