தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
சென்னை செல்ல முயன்ற 200-க்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள் தடுத்து நிறுத்தம் குண்டடத்தில் போலீஸ் – விவசாயிகள் இடையே நள்ளிரவு வரை வாக்குவாதம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், அருகே உள்ள பெள்ளம்பட்டி
கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் நோக்கி நடைபெற உள்ள பேரணியில் பங்கேற்க தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து
200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இரவு பேருந்துகளில் புறப்பட முயன்றனர்.
பெள்ளம்பட்டி மற்றும் அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் குழுவாக திரண்டு, சென்னை செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தனர். இந்த தகவலை அறிந்த குண்டடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறி, சென்னை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், “எங்களின் வாழ்வாதார பிரச்சனை குறித்து அமைதியான முறையில் போராட்டத்தில் கலந்து கொள்வதே எங்கள் நோக்கம். போராட்டத்திற்கு செல்லாமல் தடுக்க முடியாது” எனக் கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாக்குவாதம் நள்ளிரவு 2 மணி வரை நீடித்தது இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
கறிக்கோழி வளர்ப்பு கூலி உயர்வு, FCR முறையை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாநிலம் முழுவதும் விவசாயிகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பல மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் சென்னைக்கு செல்ல முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவங்களும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தாராபுரம் பகுதிக்குச் சேர்ந்த விவசாயிகள் ஸ் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.