கரூர் செய்தியாளர் மரியான் பாபு
சாம்பல் புதன் தவக்காலத்தை துவக்கிய கிறிஸ்துவர்கள்கிறிஸ்தவ மக்களின் 40 நாட்கள் தவக்காலத்தை முன்னிட்டு சாம்பல் புதனுடன் தொடங்கியது.
தவக்காலத்தை ஒட்டி கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில் அமைந்துள்ள புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் அருட்திரு. எஸ்.ஜோசப் டேவிட் பங்குத்தந்தை தலைமையில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இத்திருப்பலியில் ஆலையத்தின் அருட்சகோதரிகள், பங்கு மக்கள் ஏராளமானோர் திருப்பலியில் பங்கேற்றனர்.பின்னர் பங்கு தந்தை மற்றும் அருட்சகோதரிகள் ஆலையத்திற்கு வந்த அனைவருக்கும் சிலுவை அடையாள சாம்பல் பூசினார்கள்.