தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், பிப்- 19.
தஞ்சை மகர்நோன்பு சாவடி சின்ன ஆஸ்பத்திரி எதிரில் தெற்கு மாவட்ட பாஜக சக்தி கேந்திரா சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமை தாங்கினார்.
தெற்கு மாநகர தலைவர் கவிதா வரவேற்றார். கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் மாநகர செயலாளருமான வழக்கறிஞர் என்.எஸ்.சரவணன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் பொதுக்குழு உறுப்பினர் விருத்தாசலம் பாஜக சட்டமன்ற தொகுதி இணை அமைப்பாளரும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான உமாபதி பார்வையாளர் கர்ணன் பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட துணைத் தலைவர் விநாயகம் இளைஞர் அணி தலைவர் பாலாஜி மாவட்ட அலுவலக செயலாளர் ராஜப்பா கீழவாசல் பகுதி அதிமுக செயலாளர் சதீஷ்குமார் மற்றும் பலர் பேசினர்.