பொம்மிடி அருகே அடிப்படை வசதிகள் இன்றி அவதிபடும் மக்கள் ரோடு வசதியில்லாத நிலையில் பினத்தை மூன்று கிலோமீட்டர் ஒத்தைஅடி பாதையில் தூக்கி சென்ற அவளம்
பாப்பிரெட்டிப்பட்டி தாலுக பொ. மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு பாரதிநகர் பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாசித்த வரும் மக்களுக்கு குடிதண்ணீர், தெரு விளக்கு, ரோடுவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் வசித்து வந்த ராமன் மனைவி, சரோஜா வயது (55) இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இறந்தார்.
இறந்தவரை எடுத்து சென்று சுடுகாட்டில் புதைப்பதற்கு வழி பாதை இல்லாத நிலையில், உறவினர்கள் சிரமத்திற்கு உள்ளாகி ஒத்தையடி பாதையில் சுமார்மூன்று கிலோ மீட்டர் தூரம் எடுத்துச் சென்று பிணத்தை புதைத்தனர் போதிய அடிப்படை வசதிகள் வசதிகள் இல்லாத நிலையில் சொந்த இடம் இருந்தும் அகதிகளாக வாழ்ந்துவருவதாகவும்,
பல ஆண்டுகளாக மாவட்ட அதிகாரிகள் முதல் பேரூராட்சி அதிகாரிகள் வரை பலமுறை வழிபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு கிடைக்காத நிலையில் இந்தபகுதி மக்கள் வாழ்ந்துவருகின்றோம், எங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்து தரவேண்டும் என தெரிவித்தனர்.