UGC நிர்ணயித்த ரூ.57,700 ஊதியத்தை கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க வேண்டும் . அனைத்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு PF & EPF வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கௌரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னை ராஜகோபாலசுவாமி அரசினர் கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆர். தர்சின் தலைமையில்.
கௌரவ வரிவுரையாளர்களுக்கு ஆதராவாக மன்னை ராஜகோபாலசுவாமி அரசினர் கலைக்கல்லூரி மாணவ மாணவியர்கள் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து தமிழக அரசை வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாவட்ட பொருளாளர் க. கோபி, கல்லூரி நிர்வாகிகள் முத்து பிரகாஷ், சரண்யா, தினகரன், சந்தோஷ், மற்றும் ஹரி தாஸ் உள்ளிட்ட ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.