குண்டடம்,
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விவசாயிகளுக்கான கால்நடை பராமரிப்பு தொழில்நுட்பம் தொடர்பான ஒருநாள் பயிற்சி முகாம் குண்டடம் சமுதாயக் கூட்டத்தில் நடைபெற்றது.
மண்டல இணை இயக்குநர் சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர் உமாசங்கர் (பேட்டைகாளிபாளையம்), கால்நடை உதவி இயக்குநர் வெங்கடேஷ் பிரபு, உதவி மருத்துவர் மோகன்ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக திமுக குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
பயிற்சி முகாமில் கால்நடைகளை முறையாக பராமரிக்கும் முறைகள், நோய்கள் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும், மினரல் மிக்சர் மற்றும் அறுப்பு சோளம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 200 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் விவசாயிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் தெளிவான விளக்கங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.