மன்னார்குடி, பிப்.18

யுஜிசி பரிந்துரைத்த ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னை இராஜகோபல சுவாமி அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கெளரவு விரிவுரையாளர்கள் கூட்ட மைப்பு சார்பில், யுஜிசி பரிந்துரைத்த ஊதியம் வழங்க வேண்டும். கெளரவ விரிவுரையாளர்களுக்கு பிஎப், இ எஸ்ஐ, வழங்க வேண்டும். பெண் விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.

ஒய்வு பெறும் விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்ற ஐந்து அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி கெளரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மன்னை இராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரி வளாகத்தின் உள்ளிருந்தே நடைபெற்று கொண்டிருக்கின்ற போராட்டத்தில் கெளரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்களில் கருப்புத் துணி கட்டி கொண்டு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பாதாகைகளை கையில் ஏந்தியபடி கண்டன முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் ஜேக்ரியாஸ் அகமது, ஆனந்தன், மற்றும் தேவி உள்ளிட்ட ஏரளமானோர் கெளரவ விரிவுரையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *