தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வைத்து தூத்துக்குடி மாவட்ட தமிழறிஞர்கள் எழுத்தாளர்களை சிறப்பிக்கும் வகையில் இலக்கிய விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் ஜெகன் கலந்து கொண்டார்.

முன்னதாக மாநகராட்சி மேயர் ஜெகனை வரவேற்று கல்லூரி மாணவிகள் சிறப்பு பாடல் பாடினார்கள். விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த பாரதியார். வ உ சி. கரிசல் இலக்கிய தலைவர் ராஜநாராயணன் உள்ளிட்ட தலைவரின் படங்களுக்கு மேயர் ஜெகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பேசுகையில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் உலகத் தமிழர் மாநாடு நடத்தினார் மொழியால் பல்வேறு பிரச்சனைகள் வந்துள்ளது ஹிந்தியை வைத்து அன்று முதல் இன்று வரை அரசியல் செய்கிறார்கள் ஹிந்தியை தமிழகத்தில் புகுத்த வேண்டும் என்று தொடர்ந்து ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது ஜாதி மதத்தை கடக்கும் வகையில் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு வீடுகளில் தமிழர் திருநாள் என்று கோலமிட்டு நாம் தமிழர் என்று நிரூபித்தோம். தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது நமது மாவட்டத்தை சேர்ந்த எட்டயபுரத்தில் பிறந்து வாழ்ந்த பாரதியார். செக்கிழுத்த செம்மல் வ உ சி. அதுபோல கோவில்பட்டியைச் சேர்ந்த கரிசல் இலக்கிய தலைவர் ராஜநாராயணன் வாழ்ந்தஇல்லத்தை தமிழக அரசின் சார்பில் பராமரிக்கப்பட்டு அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

கல்விதான் நமக்கு அசைக்க முடியாத சொத்து. நான் முழு தமிழ் இலக்கியம் பேசவில்லை ஆங்கிலம் கலந்து தான் பேசுகிறேன் ஆனால் இந்த மேடையில் முழுவதும் தமிழில் பேசக்கூடிய அறிஞர்கள் அமர்ந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் சமம் என்ற நிலைமையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம். நம்ம பிறந்த ஊருக்கு தூத்துக்குடிக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்றுதான் நாம் யோசிக்க வேண்டும் நீங்கள் தான் வருங்கால தமிழகம் வருங்கால இந்தியா என்று நினைத்து செயல்பட வேண்டும். நம்மளால் என்ன உதவி செய்ய முடியும் என்பதை எண்ணி அதற்குத் தகுந்தாப் போல நாம் உதவி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும் அதன் மூலம் நாம் ஆரோக்கியமாகவும் மன தைரியமும் நமக்கு கிடைக்கும். அதிகாலையில் எந்திரித்து நாம் அன்றாட வேலையை ஆரம்பிக்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி சார்பில் பூங்காவுடன் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது அதனை நீங்கள் பயன்படுத்த வேண்டும் நேரத்தை நல்ல முறையில் படித்துக்கொண்டே உங்களுக்கு பொழுது போக்கும் வகையில் இருக்கும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பேசினார்.. நிகழ்ச்சியில் வ உ சி கொள்ளு பேத்தி செல்வி. தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அருள். முத்தாலங்குறிச்சி காமராசு. முன்னாள் மாமன்ற உறுப்பினர் திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன். காமராஜ் கல்லூரி முதல்வர் பானுமதி மற்றும் தமிழ் அறிஞர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் சான்றிதழ் மற்றும் ஊக்க தொகை வழங்கி பாராட்டினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *