திருவொற்றியூர்,

திருவொற்றியூர் குப்பம் மீனவர் கிராமத்தில் சுமார் உன் 1300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடலுக்கு மிகவும் அருகே இருப்பதால் அங்கு குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட வில்லை. இந்த நிலையில் தனி நபர் ஒருவர் பட்டா பெற்று வீடு கட்டி வருவதாக கூறி தங்கள் வீடுகளுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று தாசில்தார் மற்றும் சம்பந்த பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இந்த நிலையில் தங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று கூறி திருவொற்றியூர் தாசில்தார் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து அங்கு வந்த தாசில்தார் திலீப் குமார் மற்றும் அதிகாரிகள் மற்றும் திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாசில்தார் திலீப் குமார் இன்ஸ்பெக்டர் அவர்களுடைய ஆவணங்களை சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் தர்ணாவில் ஈடுபட்ட குடியிருப்பு வாசி மீனவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *