ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முஸ்டக்குறிச்சி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பெத்தநாச்சி அம்மன், கண்ணமுடையார், பாரமுனியப்பசாமி, காளியம்மன், இருளாயி அம்மன், வாழவந்த அமம்மன், கோவில்களின் மாசி களரி திருவிழாவை முன்னிட்டு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு என இரண்டு பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது.
முஸ்டக்குறிச்சி கிராமத்தில் இருந்து கமுதி சாலையில் குறிப்பிட்ட எல்கை தூரம் நிர்ணயிக்கப்பட்டு இந்த மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட பந்தய வீரர்கள் தங்களது மாட்டு வண்டி பந்தய காளைகளுடன் பங்கேற்றனர். இதில் முதல் நான்கு இடங்களை பெற்று வெற்றி பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்கப்பணம் மற்றும் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த மாட்டு வண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் 1000 க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்து சென்றனர்.