தர்மபுரி பிப்ரவரி19 தருமபுரி மாவட்டம், மதிகோண்பாளையம், தருமபுரி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் தற்காலிக ஒருங்கிணைந்த புளி வணிக மையம் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் வருகின்ற 21.02.2026 அன்று துவக்கி வைக்கப்படுவதையொட்டி, நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் இன்று (19.02.2026) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.காயத்ரி, தருமபுரி புளி வணிகர்கள் சங்க தலைவர் திரு.ப.பாஸ்கர், புளி வணிகர்கள் சங்க செயலாளர் திரு.வினோபாஜ், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சிவராமன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் வணிகர்கள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *