மதுரை தெப்பக்குளம், தியாகராசர் நன்முறை மேனிலைப் பள்ளியின் 69-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.விழா இறை வாழ்த்துடன் துவங்கியது.
பள்ளித் தாளாளர் வள்ளிஇராமசாமி வழிகாட்டப் பள்ளி செயல்பட்டு வருகிறது. விழாவிற்கு பள்ளியின் முதுகலை இயற்பியல் ஆசிரியர் சண்முகவள்ளி வரவேற்று பேசினார்.பள்ளிச் செயலர் நடனகோபால் வாழ்த்துரை வழங்கினார்.

பள்ளியின் தலைமையாசிரியர் (பொறுப்பு) அறிவழகன் ஆண்டறிக்கை வாசித்தார்.
பள்ளியின் முன்னாள் மாணவரும், விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் மற்றும் திட்ட இயக்கு நருமான கேசவதாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பள்ளியின் பசுமைக் கால நினைவுகளைப் பகிர்ந்து சிறப்புரை ஆற்றிச்
சாதனை படைத்த மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கிச்
சிறப்புச் செய்தார்கள் மண்மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கலைத்தந்தை கருமுத்துமாணிக்கவாசகத்தின் படைப்பில் உருவாகிய “அருந்தமிழ் வளர்த்த அமைச்சர் சேக்கிழார் நாடகம்” பள்ளி மாணவர்கள் நடித்து காட்டினர்.
முதுகலைத் தமிழாசிரியர் ஆனந்தன் நன்றி கூறினார்.


தமிழ் ஆசிரியர்கள் கார்த்திக்,ஷீலா,காளிதாஸ் ஆகியோர் விழாவைத் தொகுத்து வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *