தஞ்சாவூர்,- பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்தக் கோரி கருப்பு சின்னம் அணிந்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் உள்ள கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசாறும் அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகியவை சார்பில் உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சேவியர் செல்வக்குமார் தலைமை தாங்கி னார். மாநில பொருளாளர்
சார்லஸ் முன்னிலை வகித்தார். மண்டல தலைவர்
கோகுலகிருஷ்ணன் வரவேற் புரையாற்றினார். மண்டல செயலாளர் ரமேஷ், முன்னாள் மண்டல செயலாளர்கள் சொக்கலிங்கம், பிரகாஷ்ராஜ், சந்திரன், பேராசிரியர் அம்பிகாபதி ஆகியோர் வாழ்த்துரையாற்றி
னர்.
அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத்தொகயை உடனடியாக வழங்க வேண்டும். யு. ஜி.சி. நெறிமுறைகளின்படி எம்.பில்., பி.எச்.டி.பட்டத்திற் கானஊக்க ஊதியம் வழங்க வேண்டும். இணை பேராசிரியர் பணி மேம்பாட்டிற்கு பி.எச்.டி. கட்டாயம் என்பதை தளர்த்திட வேண்டும். புத்தொளி, புத்தாக்க பயிற் சிக்கான காலஅவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல் வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மண்டல பொருளாளர் ஸ்ரீதர் தங்கதுரை நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *