பிப்ரவரி.20
நாமக்கல்.

நாமக்கல் மாவட்டத்தின், குடியிருப்பு பகுதிகளில், கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த ஆரியூர் அருகே பெரமாண்டம்பாளயத்தில் குடியிருப்புக்கு அருகில், அரசு விதிமுறைகளைமீறி கோழிப்பண்ணை அமைக்க முயற்சி செய்து வருவதை கண்டித்தும், அரசு அனுமதி வழங்கக் கூடாது எனக் கூறியும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம் விவசாயிகள் சங்கத் தலைவர் செளந்தர்ராஜன் தலைமையில் விவசாயிகள், கிராம மக்கள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல திருச்செங்கோடு வட்டம், லத்துவாடி, பேளுக்குறிச்சி ஆகிய இடங்களில், விதிமுறைகளைமீறி அமைக்கப்பட்ட கோழிப் பண்ணைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும்,

மேலும், சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

விதிமுறைகள்மீறி அமைக்கப்பட்ட கோழிப் பண்ணைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என்றும் கூறி கோஷங்கள் எழுப்பினர்.

குறித்து இளம் விவசாயிகள் சங்க தலைவர் சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறும் போது, நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில், மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் கோழி பண்ணைகளை அமைக்க கூடாது என்று பலமுறை மனு கொடுத்தும் இதுவரை தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகமும் அதுகுறித்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் மூலம் தமிழக தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மக்கள் நலன்கள் மீது அக்கறை இல்லையா?

ஒரு சிலரின் லாப நோக்கத்திற்காக ஒட்டுமொத்த கிராமத்தின் சுற்றுச்சூழலை பாதிக்கின்ற வகையில் அமைக்கப்படுகின்ற கோழிப் பண்ணைகளை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும்,

மாசு கட்டுப்பாட்டு வாரியம், வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியோர் தங்களுக்கு இது குறித்த நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என அலைகழித்து வருகின்றனர். மத்திய அரசு வகுத்துள்ள விதிமுறைகளை மாநில அரசு கடைபிடிக்கவில்லை என்றும் தமிழ்நாடு அரசின் மீது இளம் விவசாய சங்க தலைவர் சௌந்தர்ராஜன் குறை கூறினார்.

இந்த கவன எதிர்பார்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *